search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் உதவி"

    • திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.

    பல்லடம் :

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். திருப்பூர் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் மக்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 31.03.2021-60 நிலுவையிருந்த நகைக்கடன்களில் 38453 நபர்களுக்கு ரூ.158.68 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கி நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. 31.03.2021-ல் நிலுவையிருந்த 1638 சுய உதவிக்குழுக்களை சார்ந்த 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.561 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது தேதி வரை 23697 உறுப்பினர்களுக்கு 252 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 345 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 3020 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.27 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில்உதவிக்குழுக்களுக்குகூட்டுறவுசங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.48 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 606 நபர்களுக்கு ரூ.9.86 கோடி வீட்டு வசதிக்கடன் மற்றும் வீட்டு அடமானக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    2021-22ல் ரூ.16.13 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு 1.98 லட்சம் நோயுற்ற மக்களுக்கு மட்டும் ரூ.1 கோடி தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது.சிறுவணிகர்களின் நலன்காக்க சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலத்தில் 537 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.395.00 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் 1855 பயனாளிகளுக்கு ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவிகளும், 52 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழுக்கடன்களும், 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவிகளும், 11 நபர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக்கடன் உதவிகளும், 69 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 14 நபர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 1 நபருக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடனுதவிகளும் என மொத்தம் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் -மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பழனிச்சாமி, மணி, கதிரவன், திரு.துரைராஜ், முருகேசன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.

    மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • இது போன்ற தவறான தகவல்களை, பொதுமக்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
    • கடன் தொடர்பான வதந்தியை நம்பி, வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.

    புதுடெல்லி:

    ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய தகவல் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் போலி செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி (டிஏ) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் போலி யான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும், ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

    • 10 பேர் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.
    • பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    திருப்பூர் 

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 பேர் கொண்ட குழுவாக அமைத்து, நவீன முறை சலவையகங்களை ஏற்படுத்த கடன் உதவி செய்யப்படுகிறது. சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் பணி மூலதனம் ஆகியவற்றுடன் அதிகபட்சமாக நிறுவனம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 நிறுவனங்கள் ஏற்படுத்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த திட்டம் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகுதியுடையவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
    • துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.

    இதில், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பள்ளி கல்வித் துறை, கனிமவளத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

    இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அவா் வழங்கினாா். கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கோவை எம்.பி., பி.ஆா்.நடராஜன், ஈரோடு எம்.பி., கணேசமூா்த்தி, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று ரேசன்கடையை திறந்து வைத்தார். மேலும் 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 59 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    குடும்ப அட்டை தாரர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரித்து தனியாக புதிய நிலைவிலைக்கடைகள் அமைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதில், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில், தற்போது செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் 454 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகப் பொருட்கள் மாதந்தோறும் உரிய அளவின்படி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    கிருங்காக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அணை க்கரைப்பட்டி பகுதி நேர நியாயவிலைக்கடையில் பாரதி நகர் கிராமத்தில் 168 குடும்ப அட்டைகள் உள்ளன.

    பாரதி நகர் கிராமம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களை பெறும் வகையிலும், மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடத்தில் இயங்குவதற்கு பகுதிநேர நியாயவிலைக்கடையாக அமைக்கப்பட்டு, இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று, பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேல், சரகத்துணைப் பதிவாளர் (காரைக்குடி) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டாட்சியர் கயல்செல்வி, ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை உதவி
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர்கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சுயஉதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வரையும், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதுபோன்று மேற்கண்ட அனைத்து திட்டங்களுக்கும் குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    மேலும், சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் பெற விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர்சுய உதவி குழுக்களுக்கு ரூ.2கோடியே47 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வாழ்வா தார இயக்கம் வட்டார மேலாண்மை அலகின் சார்பில் அனைத்து வங்கிகள், ஒருங்கிணைந்த வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, சின்னதுரை, முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் பாண்டி மாதேவி வரவேற்றார். குட்லாடம்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குழுவிற்கு பெருங்கடனாக ரூ.1 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் உள்பட 25 குழுக்களுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் 35 குழுக்கான ரூ.2 கோடியே 25 லட்சத்திற்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு வங்கியின் அனுமதியும் வழங்கப்பட்டது.

    வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் லதா, தனபாக்கியம், செந்தாமரை, பவித்ரா, வட்டார வள பயிற்றுனர் நாச்சம்மாள், குட்லாடம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து

    கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் வட்டார அளவிலான 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மதுரை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காளிதாசன் வழங்கினார். இதில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள சுய உதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வங்கிகளின் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு காசோலைகளை மகளிர் குழுவினருக்கு வழங்கினர். இந்த நிகழ்வில் மகளிர் குழுக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    • சிவகங்கையில் 7 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
    • பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது 7 பயனாளிகளுக்கு ரூ.9.2 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-

    கூட்டுறவு கடன் சங்க பணியாயாளர்கள் நடப்பாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கினை எய்திட முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியின் போது பொதுமக்களிடம் கனிவாகவும், முறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு திட்டங்களின் வாரியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கால அளவு, விவசாயிகளின் பயிர்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றை முறையாக பராமரித்து உயர்அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள, தேவையுள்ள பயனாளிகளுக்கு முழு அளவில் சென்றடைய பணி யாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்.

    எனவே தன்னலமற்ற பணி செய்து அரசின் திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு சென்றடைய சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, மேலாண்மை இணை இயக்குநா; ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், துணைப்பதிவாளர்கள் வெங்கட்லட்சுமி, சரவணன், கூட்டுறவு கடன் சங்க சார்பதிவாளர் மூகாம்பிகை உட்பட சங்கச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4755 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 81 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 4914 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4755 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    2021-22-ஆம் ஆண்டில் 5600 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.448.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 10226 மகளிர் திட்டம் சார்ந்த மற்றும் பிற சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக ரூ.508.47 கோடி வங்கி நேரடி கடன் வழங்கப்பட்டது. மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 8594 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.550.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2139 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.118.00 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 81 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இக்கூட்டமைப்புகளில் 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டில் வங்கி பெருங்கடனாக ரூ.3.42 கோடி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டிற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.00 கோடி வங்கி பெருங்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதில் 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.63 கோடி பெருங்கடன் வழங்க கேட்டு வங்கிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் தொகையை முறையாக செலுத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தொகையில் ரூ.3 இலட்சத்திற்கான வட்டி மானியத்தில் 5% சுயஉதவிக் குழு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    சிறப்பாக செயல்படும் சிறப்பு குழுக்களான மாற்றுத்திறனாளிகள். நலிவுற்றோர் மற்றும் முதியோர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடன் பெறு வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டாரங்களில் தர மதிப்பீட்டு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தி சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் பெற்றுக் கொடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    • கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு–பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார–மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான–சிறு தொழில் கடன், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இதன் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது க்குள் இருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகாலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் பெண்களுக்கான–புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரைகடனுதவி–வழங்கப்படு கிறது.

    சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க –வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதி க்கப்படுவார்கள்.

    சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி க்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு– ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 அயிரம் வரை கடனுத–வி வழங்கப்படுகிறது.

    மாவட்ட பி–ற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவுவங்கி–கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்தவிண்ணப்பங்களைசம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

    எனவே ஈரோ–டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்-திட்ட அறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கோரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

    மேற்படி திட்டத்தில் பயன்பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக–விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×